search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராணுவ ஹெலிகாப்டர்"

    சூடான் நாட்டில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் 3 ஊழியர்கள் பலியாகினர். 10 பயணிகள் படுகாயம் அடைந்தனர். #HelicopterCrash #Sudan
    மாஸ்கோ:

    ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவின் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று, சூடானில் ஐ.நா. அமைதிப்படையில் அங்கம் வகித்து செயல்பட்டுக்கொண்டிருந்தது.

    இந்த ஹெலிகாப்டர் 23 பேருடன் சூடான் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள கடுக்லி நகரத்தில் இருந்து எல்லையோரம் உள்ள அப்யெய் பகுதிக்கு நேற்று சென்று கொண்டிருந்தது. இந்த ஹெலிகாப்டர், ஐ.நா. இடைக்கால பாதுகாப்பு படை வளாகத்தினுள் நேற்று விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

    இந்த கோர விபத்தில் அந்த ஹெலிகாப்டரின் 3 ஊழியர்கள் பலியாகினர். 10 பயணிகள் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் 3 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

    இதை ஐ.நா. இடைக்கால பாதுகாப்பு படை, ஒரு அறிக்கையில் உறுதி செய்துள்ளது. இந்த விபத்துக்கு என்ன காரணம் என்பது உடனடியாக தெரியவில்லை. இது பற்றி விசாரணை நடத்தப்படுகிறது.
    ஆப்கானிஸ்தான் நாட்டின் கந்தஹார் மாகாணத்தில் இன்று ராணுவ ஹெலிகாப்டர் தரையில் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர். #Afghanarmy #armyhelicopter #crashlanding
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டின் மத்திய பகுதியில் இருந்து மருஃப் மாவட்டத்துக்கு ராணுவ வீரர்களை ஏற்றிவந்த ஹெலிகாப்டர் தரையிறங்கும்போது கட்டுப்பாட்டை இழந்து பயங்கரமாக மோதி, நொறுங்கி தீபிடித்தது.

    இந்த விபத்தில் இருவர் உயிரிழந்ததாக ராணுவ செய்தி தொடர்பாளர் ஜாவெத் கபூர் தெரிவித்துள்ளார்.



    இதற்கிடையில் அந்த ஹெலிகாப்டரை நாங்கள்தான் சுட்டு வீழ்த்தினோம் என்று அப்பகுதியில் உள்ள தலிபான் பயங்கரவாதிகள் அறிவித்துள்ளனர். #Afghanarmy #armyhelicopter #crashlanding
    ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர் பயணித்த ஹெலிகாப்டர் கோளாறு காரணமாக வெடித்து சிதறியதில் ஓட்டுனர் உட்பட 5 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர். #Afghanistan #HelicopterCrash
    காபுல்:

    ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளை ஒடுக்கும் முயற்சியில் அந்நாட்டு ராணுவம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தலிபான்களை முன்னேற விடாமல் தடுப்பதும், அவற்றின் கட்டுப்பாட்டில் இருக்கும் சில நகரங்களை மீண்டும் அரசின் வசம் ஒப்படைப்பதுமே குறிக்கோளாக கொண்டு பாதுகாப்பு படை வீரர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

    சமீபத்தில் தலிபான்களை எளிதில் தாக்குவதற்கு ஏதுவாக, பாதுகாப்பு படை வீரர்களை உரிய இடத்தில் கொண்டு சேர்க்க வான்வழி மார்க்கம் பயன்படுத்தப்படுகிறது. இதன்மூலம் விரைவில் பாதுகாப்பு படை வீரர்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு சென்று தாக்குதல்களை நடத்த முடிகிறது.

    அவ்வாறு இன்று பாதுகாப்பு படை வீரர்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் ஒன்று இயந்திர கோளாறு காரணமாக வெடித்து சிதறியது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 4 வீரர்கள், ஒரு ஓட்டுனர் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.

    இதுகுறித்து ஃபாராஹ் மாகாணத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில் தலிபான் தாக்குதலில் இந்த விபத்து ஏற்படவில்லை எனவும், தொழில்நுட்ப கோளாறு காராணமாகவே விபத்து ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். #Afghanistan #HelicopterCrash
    பல்கேரியா நாட்டில் பயிற்சியில் ஈடுபட்ட ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று கீழே விழுந்து நொறுங்கியதில் 2 பைலட்கள் பலியாகினர்.
    சோபியா:

    பல்கேரியா நாட்டின் குருமோவோ விமானப் படைத்தளத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று வழக்கமான பயிற்சியில் நேற்று ஈடுபட்டுக் கொண்டிருந்தது.

    தென் பகுதியில் அமைந்துள்ள ப்ளோவ்டிவ் நகரின் மேலே பறந்தபோது ஹெலிகாப்டர் தனது கட்டுப்பாட்டை இழந்தது. 
    இதையடுத்து அது கீழே விழுந்து நொறுங்கியது.

    இந்த விபத்தில் அதில் பயணம் செய்த 2 பைலட்களும் பரிதாபமாக பலியாகினர். மேலும், விமான நிறுவன ஊழியர் ஒருவரும் படுகாயம் அடைந்தார். விமான விபத்து ஏற்பட்டது என்பது குறித்து அதிகாரிகள்  விசாரித்து வருகின்றனர். #Tamilnews
    தொழில்நுட்ப கோளாறு காரணமாக அசாம் மாநிலத்தின் லக்கிம்பூர் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது. #ArmyHelicopter
    தேஸ்பூர்:

    அசாம் மாநிலம் தேஸ்பூர் பகுதியில் இந்திய ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று நேற்று பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. அதில் பைலட் உள்பட் மூன்று ராணுவ அதிகாரிகள் பயணித்தனர்.

    இந்நிலையில், ஹெலிகாப்டரில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையறிந்த பைலட், லக்கிம்பூர் பகுதியில் உள்ள கல்லூரி மைதானத்தில் ஹெலிகாப்டரை அவசரமாக தரையிறக்கினார்.

    இதுகுறித்து ராணுவ அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து சென்று ராணுவ அதிகாரிகளையும், பைலட்டையும் பத்திரமாக மீட்டனர். #ArmyHelicopter
    காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் தரையிறங்கியபோது விபத்துக்குள்ளானத்தில் ஹெலிகாப்டரில் இருந்த 4 பேரும் அதிர்ஷ்டவசமாக காயங்கள் ஏதும் இன்றி உயிர் தப்பினர். #AirForceHelicopter #JammuKashmir
    ஜம்மு:

    காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் இருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான ராணுவ ஹெலிகாப்டர் நேற்று காலை வழக்கமான ரோந்து பணிக்காக புறப்பட்டு சென்றது. இதில் 2 விமானிகள் மற்றும் 2 பயணிகள் இருந்தனர்.

    இந்த ஹெலிகாப்டர் நாதாடாப் என்கிற இடத்தில் தரையிறங்க முயன்றபோது திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து அந்த ஹெலிகாப்டர் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.

    இருப்பினும் ஹெலிகாப்டரில் இருந்த 4 பேரும் அதிர்ஷ்டவசமாக காயங்கள் ஏதும் இன்றி உயிர் தப்பினர். விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. #AirForceHelicopter #JammuKashmir
    ×